News October 21, 2024

திருவள்ளூர் அருகே ஷேர் ஆட்டோ எரிந்து நாசம்

image

பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன் பேட்டையை சேர்ந்தவர் முரளி (48). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். எனினும் ஷேர் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து வெள்ளவேடு போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 12, 2025

திருவள்ளூர்: ரேஷன் கார்டில் பிரச்சனையா?

image

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நாளை(செப்.13) ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)

News September 12, 2025

மாணவனின் விரலை கடித்த நடத்துனர்

image

ஆவடியில் இருந்து நேற்று முன்தினம் மாலை பெரியபாளையம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர் அப்போது சில கல்லூரி மாணவர்கள் பணியில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனால் நடத்துனர் மாணவர்களை உள்ளே வரும்படி கூறியுள்ளார். அப்போது ஒரு மாணவன் நடத்துனரை கை நீட்டி பேசியதால் ஆத்திரத்தில் மாணவனின் விரலை நடத்துனர் கடித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2025

போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB போன்ற முகாம்களுக்கு கட்டணமில்லா மாதிரி தேர்வுகள் 13.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-27660250 / 8489866698 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!