News March 18, 2024
மக்களவைத் தேர்தலில் தமிழிசை போட்டி?

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 2019 செப்.8ல் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற அவர், 2021 பிப்.18 முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என விருப்பம் தெரிவித்திருந்த அவர், இன்று ராஜினாமா செய்துள்ளார்.
Similar News
News August 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு CM ஸ்டாலின் சரமாரி கேள்வி..

வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்த நிலையில், மேலும் பல கேள்விகளை அடுக்கியுள்ளார் CM ஸ்டாலின். *வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? *ஆதாரை ஆவணமாக ஏற்கத் தேர்தல் ஆணையத்தை தடுப்பது எது?*எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 18, 2025
தவெக கொடிக்கு தடையில்லை.. ஐகோர்ட் தீர்ப்பு

விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது. தங்கள் கொடியை போல் இருக்கும் தவெக கொடிக்கு தடை விதிக்க கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த ஐகோர்ட், இரு கொடிகளையும் ஒப்பிடுகையில் TVK கொடி முற்றிலும் வேறுபாடானது; TVK கொடியில் மஞ்சள் நிறத்தில் யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் உள்ளதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளது.
News August 18, 2025
அன்புமணிக்கு அழுத்தம்; ராமதாஸின் அடுத்த நடவடிக்கை

ராமதாஸ் தலைமையில் நேற்று (ஆக., 18) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அதற்கு முறையான விளக்கமளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. இதற்கு விளக்கமளிக்க அன்புமணி மறுக்கும் பட்சத்தில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.