News March 18, 2024
பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை!

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.
News October 30, 2025
திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

திருச்சி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News October 30, 2025
திருச்சி: உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டத்தில் விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உர உரிமம் இல்லாமலோ, அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.


