News October 20, 2024
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிக்கைப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்தவித விபரீதமும் நடந்தால், அட்டவணையில் கொடுக்கப்பட்ட உங்கள் பகுதி ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
கள்ளக்குறிச்சி: திருட்டு வழக்கில் இருவர் கைது

செங்கமேடு, பாறை தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம், செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி ஆடு மேய்ச்சல் முடிந்து ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது 4 ஆடுகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரில் அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூன், காமராஜ் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளில் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய செப்-10 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ மதிப்பீட்டில் தக்காளி 25 ரூபாய் கத்தரிக்காய் ரூபாய் 40 அவரைக்காய் ரூபாய் 50 வெண்டைக்காய் ரொம்ப 25 புடலங்காய் ரூபாய் 30 கொத்தவரங்காய் ரூபாய் 40முருங்கைக்காய் ரூபாய் 60 முள்ளங்கி ரூபாய் 30 பரங்கி ரூபாய் 25 பூசணி ரூபாய் 20 சுரைக்காய் ரூபாய் 15 பச்சை மிளகாய் ரூபாய் 50 என விற்பனையாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நியமன உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினார்.