News March 18, 2024
BREAKING: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு

பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காத நிலையில், அவருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். பொன்முடிக்கு தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என கூறி ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
Similar News
News October 28, 2025
RO-KO-வை விமர்சித்தவர்கள் கரப்பான்பூச்சிகள்: ஏபிடி

கடந்த சில மாதங்களாக ரோஹித்தும், கோலியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருவர் சரியாக விளையாடாத போது, பொந்துகளில் இருந்து வெளிவரும் கரப்பான்பூச்சிகள் போல் விமர்சகர்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டிற்காக தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 28, 2025
5 ஆண்டுக்கும் நானே CM: சித்தராமையா

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆகியோர் 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பதவியை விட்டுத்தர விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், காங்., மேலிட முடிவுகளுக்கு உட்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் தானே CM ஆக நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
News October 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 28, ஐப்பசி 11 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை


