News October 20, 2024
நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 10, 2025
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதி வரை நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள முன் கள பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News July 10, 2025
நாகை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய பணம்

நாகை மாவட்டம் பால்பண்ணைசேரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணம் கைமாறுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு உள்ள அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
News July 10, 2025
ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE