News March 18, 2024
தமிழிசையும், தேர்தல் தோல்விகளும்!
மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கெனவே, அவர் 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. 2009 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் ராதாபுரம், சென்னை வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அவர் தோல்வியடைந்தார்.
Similar News
News November 20, 2024
கண்டெய்னர் வணிகத்தில் களமிறங்கும் இந்தியா
உலகளவில் மிகப்பெரிய வர்த்தகத் துறைகளில் ஒன்றாக கண்டெய்னர் போக்குவரத்து வணிகம் உள்ளது. அந்த வணிகத்தில் ஈடுபட மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வேயின் ‘கான்கோர்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளில் கண்டெய்னர் போக்குவரத்தில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. இது தொடர்பாக ஆய்வறிக்கை அளிக்க EY, KPMG & PwC போன்ற நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
News November 20, 2024
நாதக மா.செ.க்கள் அதிமுகவில் ஐக்கியம்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அதிமுகவில் இணைந்தார். அவருடன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரான மணிகண்டனும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார். அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் முன்னிலையில் இருவரும் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருவரும் அக்கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2024
மராட்டியத்தில் அரசியல் புயலை கிளப்பும் பிட்காயின் மோசடி
மகாராஷ்டிராவில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில், சரத்பவாரின் NCP-யும், Cong., கட்சியும் பிட்காயின் மோசடி மூலம் பெற்ற பணத்தை, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக Ex.IPS ரவீந்திர பாட்டீல் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் இதை மறுத்துள்ளன. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக நேற்று பல கோடி பணம் பாஜக ஆதரவாளரிடம் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.