News March 18, 2024
EDக்கு எதிராக முன்னாள் முதல்வர் மகள் வழக்கு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், ED-யின் கைது சட்டவிரோதமானது என கவிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.
Similar News
News October 31, 2025
எச்சில் துப்பினால், குப்பை போட்டால் அபராதம்

தூய்மை இந்தியா முன்னெடுப்பு இருந்தாலும், நாடு தூய்மையான பாடில்லை. குப்பை தொட்டியை தவிர அனைத்து இடங்களிலும் கிடக்கும் குப்பைகள், நீர் நிலைகளில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் என மோசமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இதற்காக வாரணாசி மாநகராட்சி கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரோட்டில் எச்சில் துப்பினால், குப்பை போட்டால் ₹200 அபராதம் என அறிவித்துள்ளது. இங்கும் இது அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?
News October 31, 2025
தவெகவுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்

SIR பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது TN அரசு. க, தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டத்தில் விஜய் பங்கேற்றால், அது அதிமுக-தவெக கூட்டணி கணக்கில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஒருவேளை பங்கேற்கவில்லை எனில் ’பாஜக பி டீம்’ என திமுக, தவெகவை விமர்சிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். SIR-ஐ ஆதரிக்கவில்லை என தவெக கூறினாலும், கூட்டத்தில் பங்கேற்குமா என கேள்வி எழுந்துள்ளது.
News October 31, 2025
BREAKING: தங்கம் விலை.. மகிழ்ச்சி செய்தி

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,949-லிருந்து $4,018.9-ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களுக்கு பிறகு விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ₹11,300-க்கும், சவரன் 90,400-க்கும் விற்பனையாகிறது.


