News March 18, 2024

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

image

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

தினம் ஒரு வாழைப்பழம்

image

நமது வயிற்றுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருப்பது நார்ச்சத்து (Fiber). அது வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கிறது (3 கிராம்). ஆகையால், தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது வயிற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு ஆரம்ப காலங்களில் தினம் ஒரு வாழைப்பழத்தை கொடுத்து வளர்த்தால், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்குமாம்.

News April 19, 2025

புற்றுநோய்: பிரிட்டன் கால்பந்து வீரர் திடீர் உயிரிழப்பு

image

பிரிட்டன் கால்பந்து வீரர் ஜோ தாம்சன் (36) புற்றுநோய் பாதித்து உயிரிழந்துள்ளார். புற்றுநோய் தீவிரமானதால் அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வீட்டில் தனது உறவினர்கள் மத்தியில் உயிரிழக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், ஜோ தாம்சன் உயிர் பிரிந்தது. இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மனைவி பகிர்ந்துள்ளார்.

News April 19, 2025

வசூலை குவிக்கும் GBU.. 200 கோடியை தாண்டியாச்சு..

image

அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லியில் தரமான சம்பவத்தை செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாட, உலக அளவில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே படம் ₹100 கோடி வசூலை தாண்டிய நிலையில் உலகளவில் ₹200 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!