News October 20, 2024
உதயநிதியே இப்படி செஞ்சா எப்படி.. சீறிய வேல்முருகன்

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே உதயநிதியை விமர்சித்துள்ளார் வேல்முருகன். தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அவர், “சமீபத்தில் தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றார். அவருக்கு நியமிக்கப்பட்ட செயலாளர் பிரதீப் யாதவ் யார்? அவர் ஒரு வடநாட்டு ஐஏஎஸ் அதிகாரி. ஏன் இங்க தமிழ் அதிகாரிகளே இல்லையா? உங்களுக்கு செயலாளராக இருக்கும் திறமை தமிழர்களுக்கு இல்லையா.. இதை மக்கள் சிந்திக்க வேண்டும்” எனக் கூறினார்.
Similar News
News August 21, 2025
ED ரெய்டால் DMK – BJP கூட்டணி அமையலாம்: அருண்ராஜ்

திமுகவை உருவாக்கிய அண்ணா, கடனில் வாழ்ந்து தனது கடைசி மூச்சை விட்டார் என கூறிய அருண்ராஜ், திமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் வாழ்வதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாநாட்டில் பேசிய அவர், பிளவுவாத அரசியலை செய்யும் திமுக அரசு மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகிறது என்றார். மேலும், TN-ல் அடுத்து ED ரெய்டு நடந்தால் பயந்துபோய் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்கும் என்றார். உங்கள் கருத்து?
News August 21, 2025
மதுரையில் போட்டியிடுகிறேன்… மாநாட்டில் விஜய் பேச்சு!

மதுரை மாநாட்டில் பரபரப்பாக பேசிய விஜய், தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாகக் கூறி கூட்டத்தை அதிர வைத்தார். தான் மதுரையில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்த உடனே, தொண்டர்கள் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். இதனை அடுத்து, மதுரையின் அனைத்து தொகுதிகளையும் கூறி, அனைத்திலும் விஜய் தான் போட்டி என்றார். அனைத்து தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார் எனக் கருதி வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
News August 21, 2025
ஓசி என ஏளனம் செய்யும் திமுக அமைச்சர்கள்: CTR நிர்மல்

விஜய்க்கு அனுபவம் இல்லை எனக் கூறும் திமுக அமைச்சர்கள் மக்களை ஓசி என ஏளனம் செய்வதாக CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். நேர்மையானவர்களை அரசியலில் நுழைய விடாமல் திராவிட கட்சிகள் மக்களை சுரண்ட நினைப்பதாக கடுமையாக விளாசிய அவர், திராவிடம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு வரும் தேர்தல் முடிவு கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.