News October 20, 2024

திருவள்ளூர் அருகே விபத்தில் உயிரிழந்த புதுமணபெண்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜுனா இவருக்கு அயப்பாக்கம் சேர்ந்த விஸ்வ பிரியா என்பவருடன் கடந்த 45 நாட்கள் முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணவருடன் பைக்கில் தாய் வீட்டுக்கு சென்ற போது, கவரப்பேட்டை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதில் விஸ்வ பிரியா படுகாயம் அடைந்தார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1/2

image

மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (044-27661600) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016129>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2/2

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*

News July 10, 2025

திருவள்ளூர் பகுதிகளில் நாளைய மின்தடை

image

வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துார், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை காலை, 9: 00 மணி முதல் மாலை, 5: 00 மணி வரை மின்தடை செய்யப்படும்.

error: Content is protected !!