News October 20, 2024
கலங்கரைவிளக்க சுற்றுலா பயணிகள் 300% அதிகரிப்பு

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் காணும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் கலங்கரை விளக்க மேல்தளத்திலிருந்து, சுற்றுபுற அழகை, பறவை பார்வையில் கண்டு ரசிக்கலாம் என்பதால், பயணிகள் கலங்கரைவிளக்க சுற்றுலாவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர். உங்களுக்கு கலங்கரை விளக்கம் பிடிக்குமா?
Similar News
News July 11, 2025
மின்சார ரயில்கள் ரத்து 1/3

சிங்கபெருமாள் கோயில் ரயில் பாதையில் இன்று (ஜூன் 11) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து புறப்படும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17026717>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
ரத்தாகும் மின்சார ரயில்கள் பட்டியல் 2/3

▶சென்னை கடற்கரையில் இருந்து காலை 8:31, 9:02, 9:31, 9:51, 10:56 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள்.
▶காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்.
▶செங்கல்பட்டில் இருந்து 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில்.
▶செங்கல்பட்டில் இருந்து காலை 10:40, 11, 11:30, மதியம் 12, 13:10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள். <<17026728>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
சிறப்பு ரயில்கள் இயக்கம் 3/3

▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.13 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு,
▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.46, 11, 11.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶காட்டாங்குளத்தூரில் இருந்து 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶செங்கல்பட்டில் இருந்து மதியம் 13.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க