News October 20, 2024
தேனியில் 551 பணி ஆணை வழங்கல்

போடிநாயக்கனூர் சி.பி.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், வேலைநாடுபவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 551 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, பெரியகுளம் எம்.எல்.ஏ. கே.எஸ். சரவணகுமார் முன்னிலையில் வழங்கி வாழ்த்தினர்.
Similar News
News July 8, 2025
தேனியில் குடிநீர் பிடிக்க சென்ற இடத்தில் பெண் உயிரிழப்பு

தேனி, துரைச்சாமிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்த்த காளிமுத்து என்பவரது மனைவி பாப்பாத்தி இவர் வீட்டின் முன்பு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டு சிசிச்சை பலனின்றி இறந்தார். இந்த இறப்பு குறித்து இவரது மகன் முருகன் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரணை.
News July 7, 2025
தேனி: சொந்த ஊரில் அரசு வேலை (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேனிக்கு 25 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974475>>மேலும் அறிய<<>>
News July 7, 2025
தேனி:சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

தேனி மாவட்டத்தில் 25 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு தேனி கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அனுகலாம்.