News March 18, 2024
இந்தியாவின் முதல் தபால் நிலையம்

இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட தபால் நிலையம் ஒன்று தற்போது 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1774இல் மேற்கு வங்க மாகாண கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் தபால் நிலையம் இது. தற்போது 250ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் ஆரம்பகாலத்தில் தபால் எப்படி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.
Similar News
News February 7, 2026
நடிகர் பொன்னம்பலத்திற்கு விஷம்.. பரிதாப நிலை

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம், தனது நிலைக்கு கூட பிறந்த அண்ணனே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப பிரச்னையால் தன்னுடைய உதவியாளரை வைத்து ரசத்தில் குதிரை பொடியை கலந்து கொடுத்துவிட்டதாகவும், இதனால் 3 வருஷமாக பேதி ஏற்பட்டு உடம்பே வீணாகிவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பீரில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
News February 7, 2026
தவெகவில் செங்கோட்டையன் புறக்கணிப்பா? அருண்ராஜ்

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அருண்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். தேர்தல் அறிக்கை குழுவில் KAS இல்லை என்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் பிரச்சார குழுவில் KAS முக்கிய உறுப்பினராக உள்ளதாகவும், எல்லோருக்கும் தனித்தனி பொறுப்புகளை விஜய் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 7, 2026
FLASH: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

இந்த வார வர்த்தக முடிவில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹3,840 குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. கடந்த வாரம் (ஜன.31) 22 கேரட் தங்கம் சவரன் ₹1,19,200-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹1,15,360 ஆக சரிந்துள்ளது. இதேபோல், வெள்ளியும் கிலோவுக்கு ₹35,000 சரிந்துள்ளது. 1 கிராம் ₹285-க்கும் 1 கிலோ ₹2.85 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


