News October 20, 2024
உடனே விண்ணப்பிங்க: ONGCஇல் 2,236 வேலைவாய்ப்பு

ONGCஇல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அக்கவுண்ட் எக்ஸ்யூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு, வயது வரம்பாக 24 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 25ஆம் தேதி கடைசி நாளாகும்.
Similar News
News July 6, 2025
நான் ஒரு தனி மனிதன்.. அண்ணாமலை பேச்சில் சூசகம்

அதிமுக – பாஜக கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து நிலவி வரும் சூழலில், அண்ணாமலையின் பேட்டி பேசுபொருளாகியுள்ளது. பாஜகவின் கூட்டணி ஆட்சி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஒரு தனி மனிதன், யாருடைய கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகிவிட்டாரா என நெட்டிசன்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். உண்மை என்னவாக இருக்கும்?
News July 6, 2025
பான் கார்டு எண் பற்றிய இந்த சீக்ரெட் தெரியுமா?

✦முதல் 3 எழுத்துக்கள்: A – Z என Random-ஆக தரப்படுவது ✦4-வது எழுத்து: இது ஒரு நபர் (அ) நிறுவனத்தின் வகையைக் குறிக்கும். (Ex.) P என்பது தனிநபர், C என்பது நிறுவனம், T என்பது அறக்கட்டளை ✦5-வது எழுத்து: கார்ட் வாங்குபவர் பெயரின் முதல் எழுத்து ✦6-வது முதல் 9-வது வரையான எண்கள்: 0001 – 9999 வரை Random-ஆக அளிக்கப்படுவது ✦10-வது எழுத்து: Check Digit எனப்படும் இதை பார்முலா மூலம் கணக்கிடுகின்றனர்.
News July 6, 2025
வாரத்துக்கு ₹1.60 கோடி.. Liverpool அறிவிப்பு!

சமீபத்தில், ஸ்பெயினில் நிகழ்ந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்தார். இந்நிலையில், அவரது விளையாட்டு ஒப்பந்தத்தில் மீதமுள்ள தொகையை டியோகோவின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக Liverpool கிளப் அறிவித்துள்ளது. இதன்மூலம் 2027, ஜூன் வரை வாரத்திற்கு ₹1.60 கோடி அவரின் குடும்பத்திற்கு கிடைக்கும். இவர், தனது 13 வருட காதலியை விபத்துக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் மணமுடித்தார்.