News March 18, 2024
கடலூர்: போஸ்டர்கள் அகற்றும் பணி

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணி நடந்தது. அதேபோல் துணை தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், கடலூர் மஞ்சக்குப்பம் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தினர்.
Similar News
News August 11, 2025
கடலூர்: அழகுக்கலை பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவுகள் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.
News August 11, 2025
ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி-ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
கடலூர்: அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.