News October 19, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 எண்ணிற்கு அழைக்கலாம்.
Similar News
News November 11, 2025
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (நவ.11) மாவட்டங்களில் அனைத்து துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்துகொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News November 11, 2025
ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு!

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 11, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் நேரில் ஆய்வு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (11.11.2025) அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்க நகராட்சி நேதாஜி நகர் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து வருவதை ஆய்வு செய்தார்.


