News October 19, 2024

நாளை கடைசி: தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள Digital Marketing , Event Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.20) கடைசி நாளாகும். இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதவியை பொறுத்து ஊதியம் ₹20,000 முதல் ₹1,00,000 வரை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்.

Similar News

News July 5, 2025

5 வருஷத்தில் 785 கணவர்கள் கொலை: ஷாக்கிங் ரிப்போர்ட்

image

ஹனிமூனில் கொல்வது, கண்களில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் காலை வைத்து மிதித்து கொள்வது என மனைவிகள் கணவர்களை கொல்லும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. இதில் ஷாக்கிங் தகவல் என்னவென்றால், உ.பி., பிஹார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ம.பி.,யில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் இப்படி 785 கணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என NCRB டேட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு கொலைகள்?

News July 5, 2025

FLASH: விஜய்க்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்

image

திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக தேர்தல் பரப்புரை <<16950638>>லோகோவை வெளியிட்டு<<>> பேசிய அவர், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். விஜய் குறித்த கேள்விக்கு, திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் தங்களுடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா?

News July 5, 2025

மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: சிராஜ்

image

பும்ரா இல்லாததால் பவுலிங்கில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளை அவர் அதிரடியாக வீழ்த்தினார். இதனையடுத்து பேசிய அவர், ஆகாஷ் தீப் & பிரசித் ஆகியோர் ஒருசில டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளதால், பவுலிங்கில் பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இப்படியான பொறுப்புகள் தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!