News March 18, 2024
புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
புதுவை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானிய பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..
News October 26, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், விபத்துளில் சிக்குகின்றனர். கால்நடைகளை சாலைகளில் திரியவிடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் கால்நடைகளை பிடித்து அபராத தொகை ரூ.5 ஆயிரம் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News October 26, 2025
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை!

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழையால் புதுவையில் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் அடுத்த 15 நாட்களுக்குள் அதிக மழையுடன் சுமார் 55 கி.மீ வேகத்தில் 2 புயல்கள் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்துவிதமான பேனர், கட்-அவுட் வைக்க வரும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.” என அதில் கூறப்பட்டுள்ளது.


