News March 18, 2024
திமுக பிரமுகர் கொலையில் இளைஞர் சரண்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திக்கை (38) கடந்த 15ம் தேதி 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை விரோதம் காரணமாக நடந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பாகலூர் போலீசில் பிரதாப் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News August 30, 2025
நக்கல் பட்டி பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள நக்கல் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று ஆகஸ்ட் 29 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் அடைவுகளை பற்றியும் அவர்களின் ஒழுக்கம் மேம்பாடு பற்றியும் தலைமை ஆசிரியரிடம் கலந்து உரையாடினார்கள்
News August 29, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
ஓசூர் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்