News October 19, 2024

தருமபுரி பாமக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

image

சென்னையில் இன்று (அக் 19) தர்மபுரி மாவட்ட நகர, பேரூர் ,ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனை கூட்டமானது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா அரசாங்கம் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Similar News

News July 11, 2025

ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம்

image

தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு, பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 30.11.2025க்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

காவல்துறை இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல்

image

தர்மபுரியில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தலைமை அதிகாரியாக திரு. எஸ். ஜே. சபாபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவலர்கள் விவரம் மேலே உள்ளன. தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

பேருந்தில் சில்லறை வாங்கவில்லையா? DON’T WORRY

image

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9489900749). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!