News October 19, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

போடிநாயக்கனூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள நூறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்தன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்றனர். தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணகுமார் உள்ளிட்டோர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
Similar News
News July 8, 2025
தேனி: பல் மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை

தேனி என்.ஆர்.டி., நகர் பகுதியை சேர்ந்தவர் பவிஷ்யா (20). இவர் மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரியில் 2.ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் படிப்பு மிக கடினமாக இருப்பதாக கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். தேர்வுக்கு செல்ல இருந்த நிலையில் நேற்று (ஜூலை.7) அதிகாலை மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.
News July 8, 2025
தேனியில் குடிநீர் பிடிக்க சென்ற இடத்தில் பெண் உயிரிழப்பு

தேனி, துரைச்சாமிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்த்த காளிமுத்து என்பவரது மனைவி பாப்பாத்தி இவர் வீட்டின் முன்பு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டு சிசிச்சை பலனின்றி இறந்தார். இந்த இறப்பு குறித்து இவரது மகன் முருகன் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரணை.
News July 7, 2025
தேனி: சொந்த ஊரில் அரசு வேலை (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேனிக்கு 25 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974475>>மேலும் அறிய<<>>