News October 19, 2024

ரயில் பயணத்தில் விதிமீறல் 48.61 லட்சம் அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆயுதபூஜையையொட்டி சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களாக பயணிகளிடம் பயணச்சீட்டு சிறப்பு சோதனை ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தது, சுமை கட்டணம் பெறாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 8,390 பேரிடம் அபராதமாக ரூ. 48.61 லட்சம் வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News August 27, 2025

சேலம்: மகளிர் உரிமைத்தொகை.. 80,277 பேர் விண்ணப்பம்!

image

கடந்த ஜூலை 15- ஆம் தேதி முதல் ஆக.23- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 70,363 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 80,277 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

சேலம் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு ஓணம் சிறப்பு ரயிலை (06009) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.28-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கண்ணூர் சென்றடையும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

image

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.

error: Content is protected !!