News October 19, 2024

எந்த அணியின் கனவு நிறைவேறும்!

image

WC T20 தொடர் இறுதிப்போட்டியில் NZ-SA அணிகள் நாளை மோதவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது இவ்விரு நாடுகளின் ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் இதுவரை T20 WCயை வென்றதில்லை. WC T20 தொடரில் NZ அணி 2 முறையும், SA அணி ஒரு முறையும் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. ஆனால் இம்முறை இவ்விரு அணிகளில் ஏதேனும் ஒன்று நிச்சயம் கோப்பையை வெல்லும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News

News August 9, 2025

திமுகவில் இணைந்தவுடன் அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு

image

சமீபத்தில் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பை ஸ்டாலின் கொடுத்துள்ளார். ஆம்! திமுகவின் இலக்கிய அணி தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய சமூக வாக்குகளை கருத்தில் கொண்டு 2026 தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 9, 2025

திருமாவளவன் காணாமல் போவார்: EPS

image

<<17349030>>MGR-ஐ<<>> விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக எனவும் தெரிவித்தார். NDA கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், 8 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமைத்து, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

image

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!