News October 19, 2024
செறிவூட்டப்பட்ட அரிசி பாதுகாப்பானது

செறிவூட்டப்பட்ட அரிசியை அனைவருமே சாப்பிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில், இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட ரத்த சிவப்பணு பாதிப்புள்ளவர்களுக்கு இந்த அரிசி பாதுகாப்பானதா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இந்த அரிசியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என ஆய்வில் உறுதியாகியுள்ளது.
Similar News
News July 5, 2025
சீனாவை சீண்டிய கிரண் ரிஜிஜு.. என்ன ஆச்சு?

தலாய் லாமாவின் வாரிசு நியமனம் அவரது விருப்பப்படி அமைய வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் விவகாரங்களில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்காதவாறு தனது நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஓ நிங் வலியுறுத்தியுள்ளார்.
News July 5, 2025
அடுத்தடுத்து டக் அவுட் ஆகிய 6 பேர்… அசத்தல் சிராஜ்!

தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட், ஆலி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ், பஷீர், பிரைடன் ஆகியோர் டக் அவுட்டும் ஆக இங்கிலாந்து அணி சுருண்டது. இந்த வகையில் 6 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.
News July 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!