News March 18, 2024
திருவண்ணாமலையில் குறைதீர் கூட்டம் ரத்து!

திருவண்ணாமலையில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
தி.மலை: தீபத் திருவிழா: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in-ல் பதிவு செய்து, நவம்பர் 3 முதல் 17 வரை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அனுமதி பெற்ற இடம், நேரம், விதிமுறைகளின்படி மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
தி.மலை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 31, 2025
தி.மலை: அண்ணாமலையார் கோயில் முக்கிய அறிவிப்பு

தி.மலை அருணாசலேசுவரர் கோயிலில் நவ.4-ம் தேதியன்று அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்று பிற்பகல் 3 மணி-மாலை 6 மணி வரை நடை சாற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு தரிசன அனுமதி வழங்கப்படும். அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவதால், 4 மற்றும் 5-ம் தேதிகளில் முன்னுரிமை தரிசனம் வழங்கப்படமாட்டாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.


