News March 18, 2024

கள்ளக்குறிச்சி மக்களின் கவனத்திற்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 6, 2025

வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து கல்வராயன் மலை பகுதிக்கு வெள்ளி மலை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில், எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு வருவதாகவும், கல்வராயன் மலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 5, 2025

இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News July 5, 2025

பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04151-222383) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!