News October 19, 2024
குடும்பத்தோடு கூலித்தொழிலாளியை கொலை செய்த கொடூரம்

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைர பிரகாசத்திற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜசேகரன் வைர பிரகாசத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைர பிரகாஷ் அவரது தந்தை விநாயக மூர்த்தி, சகோதரர் விக்ரமனை அழைத்து சென்று ராஜசேகரனை கத்தி அரிவாளால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்த தந்தை மகன்கள்களை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News July 10, 2025
சிவகாசி: குடும்பமே விபத்தில் சிக்கிய கொடூரம்

சிவகாசி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன் (39). இவர் தனது மனைவி ஷோபனா (32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் பைக்கில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிறுத்தம் அருகே பாண்டீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மாதவநாதன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் மாதவநாதன், ஷோபனா, நித்யாஸ்ரீ ஆகியோர் காயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News July 10, 2025
விருதுநகரில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <
News July 10, 2025
பாலையம்பட்டி பைபாஸில் விபத்து; மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி ஊராட்சியில் (ஜூலை 10) காலை 5 மணியளவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களான மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரண்டு லாரிகளிலும் முன் பக்கம் முற்றிலும் சேதமாகியது. இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.