News October 18, 2024

மகாராஷ்டிரா தேர்தலில் விசிக போட்டி

image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் விசிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து நாளை (அக்.19) காலை அவுரங்காபாத்தில் அறிவிப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Similar News

News September 4, 2025

சச்சினுக்கு உயர்ந்த பொறுப்பு வழங்கும் BCCI?

image

BCCI தலைவராக சச்சின் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சச்சினிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சச்சின் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக,
70 வயது நிறைவடைந்ததால், BCCI தலைவராக இருந்த ரோஜர் பின்னி சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

News September 4, 2025

EPS-க்கு நன்றி தெரிவித்த திருமா.. ஏன் தெரியுமா?

image

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கிவிடும் என EPS எச்சரித்து இருந்தார். அதற்கு, எங்கள் மீது கரிசனம் காட்டுவதற்கு EPS-க்கு நன்றி எனவும், விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கான அரசியல் பேசும் எங்களது இயக்கத்தை யாராலும் விழுங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விசிக நாளுக்கு நாள் வலிமை பெற்று வருவது EPS-க்கு தெரியும், ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் இப்படி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News September 4, 2025

விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு ‘நோ’: ஐஸ்வர்யா

image

விஜய்யே அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் நகைக்கடை விழாவில் பங்கேற்ற அவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்கான வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என்றார். அண்மையில் நடிகை அம்பிகா, தான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!