News October 18, 2024
வெஸ்ட் இண்டீசுக்கு 129 ரன்கள் இலக்கு

மகளிர் T20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 128/9 ரன்கள் எடுத்துள்ளது. நியூசி., அணியில் அதிகபட்சமாக Suzie Bates 26, Georgia Plimmer 33 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. WI சார்பில் சிறப்பாக பந்து வீசிய Deandra Dottin 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Similar News
News July 5, 2025
கில் பேட்டிங் மாஸ்டர்கிளாஸ்: கங்குலி

இந்தியா- இங்கி., இடையேயான 2வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். இந்நிலையில் இந்திய அணியின் ex கேப்டன் கங்குலி, கில்லின் ஆட்டத்தை மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் எனப் பாராட்டியுள்ளார். இங்கி., மண்ணில் தான் பார்த்ததிலேயே, இதுதான் சிறந்த இன்னிங்ஸ் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
News July 5, 2025
புனேயில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் திருப்பம்

புனேயில் கூரியர் பையன் போல் வந்து <<16929359>>பெண்ணை பாலியல் வன்கொடுமை<<>> செய்ததாக எழுந்த புகாரில் இளைஞர் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பழக்கமானவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. புகார் கூறிய பெண்ணுக்கு மனநல பிரச்னைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வழக்கில் ஆதாரமாக காட்டப்பட்ட செல்பியை அப்பெண்ணே எடிட் செய்து மிரட்டல் வாசகத்துடன் பரப்பியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
News July 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!