News October 18, 2024
காவல் ஆணையர் மன்னிப்பு கேட்டதாக பரவிய போலியான தகவல்

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, “ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், காவல் ஆணையர் அருண், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது போலியான தகவல் என தற்போது தெரியவந்துள்ளது.
Similar News
News July 10, 2025
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2/2

எழுத்தர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும். மற்ற பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. <
News July 10, 2025
இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 1/2

தமிழக இந்து சமய அறநிலையத் துறை, வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள 05 எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 19.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை <<17016321>>இங்கே <<>>தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
சென்னை மக்களே! நமது குப்பை நமது பொறுப்பு

சென்னை அனைவரின் பார்வையிலும் தூய்மையான நகரமாக தெரிகிறது. ஆனால் சென்னையை அழகாக்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் தினமும் 65 லட்சம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பகலில் மக்களால் தெரு முழுவதும் வீசப்படும் குப்பைகள், இரவு முழுவதும் அவர்களால் சுத்தப்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம், குப்பைகளை குப்பை தொட்டிகளில் போட பழகுவோம். ஷேர் பண்ணுங்க!