News October 18, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: வைரமுத்து எச்சரிக்கை

image

“திராவிட” என்ற சொல்லை நீக்கிவிட்டு தேசிய கீதத்தைப் பாட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடம் என்பது நாடல்ல; இந்தியாவின் ஆதி நாகரிகத்தின் குறியீடு என்றும் குறிப்பிட்டுள்ளார். தாய்மொழி காக்கத் தங்கள் உடலுக்கும் உயிருக்குமே தீவைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள், அந்த நெருப்பின் மிச்சம் இன்னும் தங்களிடம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 7, 2025

பாக்.,யிடம் தோல்வியடைந்தால் பொறுமை போய்டும்: சேவாக்

image

எப்போதெல்லாம் பாக்.,க்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைகிறோமோ, அப்போதெல்லாம் தன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று சேவாக் கூறியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தனது பொறுமையை இழந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இந்த டென்ஷனுக்கு காரணம், பாக்., உடனான கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த ஒரு Luck & Unlucky தான். ஏனென்றால், பாக்.,க்கு எதிராக சேவாக் விளையாடியபோது 17 வெற்றி, 21 தோல்விகளை இந்தியா சந்தித்துள்ளது.

News September 7, 2025

அபர்ணா தாஸின் ஆல்டைம் ஸ்டன்னிங் லுக்ஸ்

image

கண்களாலேயே தனது உள்ளார்ந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவதில் கெட்டிக்காரர் தான் அபர்ணா தாஸ். ஸ்மைலிங்கான லுக், ஸ்டன்னிங் காஸ்ட்யூம் & லைட் மேக்கப் உடன் அவர் வெளியிட்ட போட்டோஸுக்கு ரசிகர்கள் ஹார்ட்ஸை (ஹார்ட்டின்கள்) கொடுத்து வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம், அவரை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம். அபர்ணாவிடம் உங்களுக்கு பிடித்தது எது?

News September 7, 2025

TET தேர்ச்சி கட்டாயம்: ஆக்‌ஷனில் பள்ளிக்கல்வித்துறை

image

பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று SC தீர்ப்பளித்தது. இதனால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.

error: Content is protected !!