News October 18, 2024
Relax Please: மனதின் கழிவுகளை வெளியேற்றுங்கள்!

உடலின் கழிவுகளை வெளியேற்றுவது போல, மனக்கழிவுகளையும் அவ்வப்போது வெளியேற்ற வேண்டும் என உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அடக்கி வைக்கப்படுகிற மன உணர்வுகள் ஆபத்தானவை என்பதால் வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இதை கேட்பதற்குக் கொஞ்சம் விநோதமாகக் கூட இருக்கலாம். யாரும் இல்லாத இடத்துக்குச் சென்று பேசி, கத்திக்கூட நம் உணர்வுகளை வெளியேற்றலாம். இதனாலும் மனம் அமைதியாகும்.
Similar News
News July 4, 2025
ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

மிக கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது. 6-ல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014 – 2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. டீனேஜ் மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஆகாஷ் தீப்

கடப்பாரை பேட்டிங்னா இங்கிலாந்துதான் என்பதை நிரூபிப்பது போல் 2-வது டெஸ்டில் ஹேரி புரூக்கும்(158), ஜேமி ஸ்மித்தும்(184) விளையாடினர். 100/5 என்று இருந்த இங்கிலாந்து அணியை இருவரும் சதம் அடித்து, சரிவில் இருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 300 ரன்களை கடந்து இந்தியாவுக்கு தலைவலியாக மாறியது. இந்நிலையில் ஆகாஷ் தீப் ஹேரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு நிம்மதி அளித்தார்.
News July 4, 2025
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…

மழை சீசனில் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உணவுகள் உதவும்: *சீசன் பழங்கள்: ஆப்பிள், நாவல், லிச்சி, பப்பாளி, பேரிக்காய், மாதுளை *தயிர், மோர் -அளவுடன் பகலில் மட்டும் *சுண்டைக்காய், வேப்ப விதைகள், மூலிகை டீ போன்ற கசப்பு உணவுகள் *வேகவைத்த காய்கறிகள் *கொய்யா, ஆரஞ்சு (வைட்டமின் சி பழங்கள்) *இஞ்சி, பூண்டு *மத்தி மீன், இறால், நட்ஸ், அவகாடோ உள்ளிட்டவை.