News October 18, 2024
சேவாக்கின் சாதனையை முறியடித்த டிம் சவுதி

டெஸ்டில் சேவாக்கின் வாழ்நாள் சாதனையை நியூசி. வீரர் டிம் சவுதி முறியடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டிம் சவுதி 65 ரன் எடுத்தார். அதில் 4 சிக்சர்களும் அடக்கம். இதன் மூலம் டெஸ்டில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக்கை (91 சிக்ஸ்) பின்னுக்கு தள்ளி டிம் சவுதி (93 சிக்ஸ்) 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பென் ஸ்டோக்ஸ் (131 சிக்ஸ்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 28, 2025
நடிகர் மாதவன் ஆபத்தில் சிக்கினார்

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள லே பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ‘2008-ல் ‘3 இடியட்ஸ்’ ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
News August 28, 2025
இந்த நாட்டில் இந்தியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இந்தியர்களுக்கான விசா நுழைவு விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது. இது பற்றி பேசிய இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ காசினோ, அமெரிக்கா விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு விசா இன்றி வரமுடியும் என தெரிவித்துள்ளார். விசா தளர்வு இரண்டு நாடுகளுக்கும் அற்புதமான செய்தி எனவும் இந்தியர்களை வரவேற்க அர்ஜென்டினா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
News August 28, 2025
ஸ்பைடர் மேனுக்கு பயிற்சி கொடுக்கும் ஜாக்கி சான்

ஸ்டண்ட் காட்சியில் எவ்வளவு ரிஸ்க் இருந்தாலும் அதில் துணிந்தும் ரசிக்கும்படியும் நடிக்க கூடியவர் ஜாக்கி சான். வயது காரணமாக நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர் தற்போது ‘Spider-Man : Brand New Day’ படத்தில் பணியாற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. ஜாக்கி சானும் அவருடைய ஸ்டண்ட் குழுவும் ஸ்பைடர் மேன் படத்தில் முக்கிய சண்டை காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஸ்பைடர் மேன் குங்ஃபூ சண்டையிட்டால் எப்படி இருக்கும் ?