News March 18, 2024

திருப்பத்தூர்: பேரூராட்சி செயலர் மீது பாய்ந்த நடவடிக்கை.

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 13, 2025

தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்

image

திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

News August 13, 2025

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்வுக்கூட்டம்

image

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் புதூர்நாடு, ஆம்பூர் பொதுமக்களிடம் மொத்தமாக 47 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.

News August 13, 2025

திருப்பத்தூர்: கிராம சாபை கூட்டம் மக்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வருகின்ற (15-08-2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் 2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்தர கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுசெலவினம் , தணிக்கை அறிக்கை , குடிநீர் விநியோகத்தின் உறுதி , அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

error: Content is protected !!