News October 18, 2024
வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 18) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News July 9, 2025
வேலூரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

வேலூரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு 113 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான நேர்காணல் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது. இதில் 90 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு உயரம், எடை, ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் (2/2)

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்.
News July 9, 2025
வேலையில்லாதவர்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை (1/2)

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். வேலூரில் விருப்பமுள்ளவர்கள் <