News October 18, 2024

Health Tips: இப்படி வேலை செய்வது ஆபத்து

image

உடல் உழைப்பு இல்லாததால், அலுவலகங்களில் ஸ்டாண்டிங் டெஸ்க் முறை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் நின்று வேலை செய்தால், நரம்புகளில் ரத்த ஓட்டத்தை குறைக்கும் வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதிகம் உட்காராமலும், நிற்காமலும் இடைவெளி எடுக்குமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News July 4, 2025

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

image

ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.

News July 4, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. திருவள்ளூர், கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும்,சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 4, 2025

போராட்டம் நடத்த தவெகவுக்கு என்ன அவசரம்? ஐகோர்ட்

image

போலீசுக்கு அழுத்தம் தரவேண்டாம் என தவெக-வுக்கு சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பே கடிதம் தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. போலீசாருக்கு நிறைய வேலைகள் உள்ளதாக தெரிவித்த கோர்ட் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு என்ன அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனுதாக்கல் செய்திருந்தது.

error: Content is protected !!