News October 18, 2024
INDIA-வில் இருந்து தமிழகத்தை பிரிக்க முயற்சி: ஆர்.என்.ரவி

இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குறை கூறியுள்ளார். டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் பேசிய அவர், இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது என்றார். இந்தியாவின் பலமான அங்கமாக தமிழ்நாடு இருக்கும் எனவும், அதை யார் நினைத்தாலும் உடைக்க இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 4, 2025
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
News July 4, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. திருவள்ளூர், கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும்,சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
News July 4, 2025
போராட்டம் நடத்த தவெகவுக்கு என்ன அவசரம்? ஐகோர்ட்

போலீசுக்கு அழுத்தம் தரவேண்டாம் என தவெக-வுக்கு சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பே கடிதம் தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. போலீசாருக்கு நிறைய வேலைகள் உள்ளதாக தெரிவித்த கோர்ட் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு என்ன அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனுதாக்கல் செய்திருந்தது.