News October 18, 2024
அடுத்தடுத்து இந்திய வீரர்கள் அரை சதம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 52 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான் இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ளனர். தற்போது வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கோலி 67*, சர்ஃபராஸ் 62* ரன்களுடன் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
அப்பாவை அசைக்க முடியாது: ஸ்ருதி உறுதி

‘தக் லைஃப்’ தோல்வி கமல்ஹாசனை பாதிக்கவில்லை என அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சினிமாவில் வெற்றி, தோல்வி என தனது தந்தை நிறைய பார்த்தவர் எனவும், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் சினிமாவில்தான் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இந்த நம்பர் கேம் ஒருபோதும் தந்தையை பாதிக்காது என தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ என கமலின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.
News August 20, 2025
புதிய சட்ட மசோதா நிறைவேற வாய்ப்புள்ளதா?

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான <<17459383>>புதிய சட்ட மசோதா<<>>, ஒரு அரசியலைப்பு சட்டத்திருத்தம் ஆகும். ஆகவே, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை (லோக் சபாவில் 362 எம்பிக்கள்) தேவை. NDA-வுக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 164 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் NDA-வுக்கு 125 பேர் தான் உள்ளனர். இருந்தும் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜகவின் திட்டம் என்ன? எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?
News August 20, 2025
BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.