News October 18, 2024
WOW: இனி பறந்துகிட்டே Office போகலாம்..!

பெங்களூருவில் பறக்கும் எலக்ட்ரிக் டாக்ஸிகளை Sarla Aviation என்ற தனியார் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக பெங்களூரு விமான நிலையம் – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி இடையே சேவையை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 52 கி.மீ தூரத்தை, 19 நிமிடங்களில் டாக்ஸி கடக்கும். இதற்காக ₹1,700 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், 7 சீட்களை கொண்ட டாக்ஸி இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 20, 2025
மற்றொரு திசைத் திருப்பும் முயற்சியா?

எப்போதெல்லாம் அரசுகளுக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய சர்ச்சை உருவாக்கப்படும் என்பார்கள். தற்போது வாக்காளர் பட்டியல் சர்ச்சையை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. ராகுலும் ‘வோட் அதிகார்’ பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ‘<<17462799>>PM, CM<<>> பதவிபறிப்பு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதா என சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 20, 2025
தனியாருக்கு தூய்மைப் பணிகள்: HC முக்கிய உத்தரவு

சென்னை மாநகராட்சியில் (GCC) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த HC, மண்டலம் 5, 6-ல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான GCC தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது. இதற்காக போராட்டமும் நடைபெற்றது.
News August 20, 2025
GST வரி மாற்றம்: நாடு முழுவதும் விலை குறைகிறது

GST வரி விதிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்யவுள்ளது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆக உள்ள வரி முறைகள் 5%, 18% மற்றும் 40% ஆக மாறவுள்ளது. இதனால், நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய டூத் பேஸ்ட், குடை, பிரஷர் குக்கர், சிறிய அளவிலான வாஷிங் மெஷின், செல்போன், காலணிகள், ஆடைகள், மருந்து உள்ளிட்டவற்றின் விலை குறையும். அதேநேரம், புகையிலை, சூதாட்டம் ஆகிவற்றின் விலை உயரும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.