News October 18, 2024
ஒரே பழத்தில் அனைத்துச் சத்துகளும்

*உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் ஒருங்கிணைந்து கிடைப்பது அத்திப்பழத்தில்தான்.
*அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட கல்லீரல் வீக்கம், ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
*அத்தியில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்கும்.
*அத்திப்பழத்தில் காணப்படும் பொட்டாஷியம் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்கும்.
Similar News
News August 20, 2025
புதிய சட்ட மசோதா நிறைவேற வாய்ப்புள்ளதா?

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான <<17459383>>புதிய சட்ட மசோதா<<>>, ஒரு அரசியலைப்பு சட்டத்திருத்தம் ஆகும். ஆகவே, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை (லோக் சபாவில் 362 எம்பிக்கள்) தேவை. NDA-வுக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 164 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் NDA-வுக்கு 125 பேர் தான் உள்ளனர். இருந்தும் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜகவின் திட்டம் என்ன? எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?
News August 20, 2025
BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News August 20, 2025
30 நாள் கெடு விதிக்கும் சட்டம்: யாருக்கு குறி?

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?