News October 18, 2024
சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை நவ.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News August 25, 2025
விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
விருதுநகர் மக்களே, பிரச்சனையா? உடனே கால் பண்ணுங்க!

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
News August 25, 2025
கடன் தொல்லையால் ஓட்டுநர் தற்கொலை

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டி(33) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். டிரைவர் பாண்டி குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.