News October 18, 2024

மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை: கமிஷனர்

image

சென்னை மாநகர ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான ஆணையர் அருண், எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை. யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார்.

Similar News

News July 9, 2025

சென்னையில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 20 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு (044-25268323)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001779>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்

News July 9, 2025

சென்னையில் 1002 ரவுடிகள் குண்டாஸில் கைது

image

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் நேற்று வரை 1,002 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட அலுவலக பிரிவில் பணிபுரிந்து வருவோருக்கு கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார். *ரவுடிகளின் கூடாரமாக உள்ளதா சென்னை?*

error: Content is protected !!