News March 18, 2024
சேலம்: ஆர்வத்தோடு தேர்வெழுதிய முதியவர்கள்!

’புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்’ கற்கும் முதியோர்களுக்கு மதிப்பீட்டு எழுத்துத் தேர்வு சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. அந்த வகையில் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டிஆலா பள்ளியில் நடைபெற்ற தேர்வில், முதியோர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா, திட்ட தன்னார்வலர் சங்கீதா உடனிருந்தனர்.
Similar News
News October 23, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.23) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 23, 2025
மேட்டூர் ஆணை நிலவரம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி எட்டியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிக அளவு உள்ளதால், தற்போது 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மென்மேலும் நீர்வரத்து அதிகம் உள்ளதால் தொடர்ந்து 60,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் கரையோர மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார்.
News October 23, 2025
சேலம் மாவட்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி மாணவர்கள் செய்யக்கூடாதவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். ஆறு, குளம், குட்டை பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளில் கழிவு நீர் தொட்டிகள் குடிநீர் தொட்டிகள் கிணறுகள் அருகில் செல்லக்கூடாது. சைக்கிளில் செல்லும்போது சகதி பக்கம் செல்லக்கூடாது என கூறினார்.