News March 18, 2024

ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கு நன்கொடை

image

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Similar News

News August 14, 2025

கூலி ரஜினி கிரீடத்தின் வைரம்: SK

image

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிக்கு SK வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தங்களைப் பார்த்து, தங்களைப் போல மிமிக்ரி செய்து, தற்போது தங்களது துறையிலேயே தானும் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் என்றும், தங்களது கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக கூலி ஜொலிக்கும் என தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 427 ▶குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். ▶ பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

News August 14, 2025

அரசு ஊழியர்கள் திமுகவை எதிர்ப்பார்கள்: அன்புமணி

image

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.

error: Content is protected !!