News October 18, 2024
பருவ மழை: சிறப்பு செயற்பொறியாளர் நியமனம்

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அவசர பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத்துறை சிறப்பு பொறுப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படிநெல்லை மாவட்டத்திற்கு நீர்வளத்துறை திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் மகேஸ்வரி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
நெல்லை பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News August 25, 2025
நெல்லையில் இன்று கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 25, 2025
முன்னீர்பள்ளம் தீ விபத்தில் புதிய தகவல்

திருநெல்வேலி ஆரைகுளத்தில் மகனின் திருமணத்திற்கு அழைக்காத கோபத்தில் தந்தை, மனைவி மற்றும் மற்றொரு மகனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதில் மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் 50 % காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். குடும்பத் தகராறு இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியது.