News March 18, 2024
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்கு தொலைபேசி மூலம் வரும் புகார்கள், கண்காணிப்புக்குழு, கணினியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொ.பேசி. எண்.18004259769 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்
Similar News
News January 30, 2026
அரியலூர்: மானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

அரியலூர் மாவட்டம் குவாகம் ஆண்டாள் தெரு அருகில் உள்ள முந்திரி காட்டில், ஒரு மானை நாய்கள் கடித்து குதறி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, மானை உடனடியாக மீட்டு குவாகம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்துள்ளது வருகின்றனர். மேலும் ஆண்டிமடம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
அரியலூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
அரியலூர்: ஆட்சியரகத்தில் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டார். அப்போது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


