News October 18, 2024

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை

image

கிள்ளை அடுத்த பொன்னன் திட்டு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தொழிலாளி வீரமணி (32). இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை வீரமணி தனது வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 21, 2025

கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

சிவாயம்: ஊராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (ஆக.21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமராட்சி அடுத்த சிவாயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி, பண்ருட்டி சசிகலா திருமண மண்டபம், திருமங்கலம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மற்றும் விருத்தாசலம் அடுத்த எடசித்தூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

கடலூர்: தமிழ் தெரிந்தால் போதும்.. வங்கியில் வேலை

image

கடலூர் மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!