News October 18, 2024

புதுச்சேரி: மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

புதுவை சென்டாக் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.டெக்., பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டபடிப்புகள், கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் சென்டாக் இணையதளம் மூலம் நாளை 19ம் தேதி மதியம் 2:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 14, 2025

புதுவை: டிரைவர்களுக்கு போக்குவரத்து எஸ்பி எச்சரிக்கை

image

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார்- ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது, ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார்.

News September 14, 2025

புதுவையில் ஆசிரியர் தற்கொலை; போலீசார் விசாரணை

image

புதுவை மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால், விரக்தியடைந்த அவர் விசம் குடித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 14, 2025

புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <>https://recruitment.py.gov.in<<>> என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!