News March 18, 2024
சேலம்: மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து

மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை பெட்டியில் மனுக்களாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
700 ஆண்டுகள் பழமை: பள்ளி மாணவர்கள் அசத்தல்!

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கொடுத்த தகவலின்படி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் அன்பரசி, விஜயகுமார் மாணவர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது அது 700 ஆண்டுகள் பழமையான, 13-ஆம் நூற்றாண்டு போர் வீரன் நடுகல் என உறுதி செய்யப்பட்டது.
News August 14, 2025
சேலம்: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சேலம் மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு தடுப்பூசிப் போடும் பணியைத் தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் முதல் கட்டமாக வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
News August 14, 2025
சேலம்: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <